ஈசி ஈவினிங் ஸ்நாக்ஸ் : முப்பருப்பு வடை ரெசிபி!

தேவையானவை: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா கால் கப், வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஐந்து

பெருங்காயத்துாள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:மூன்றுவித பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்துாள் சேர்த்து, சற்று கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவில் வெண்ணெய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து, வடைகளாக தட்டவும்.

பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் வடையை போட்டு நன்கு பொன் நிறாமாக பொரித்து எடுக்கவும்.