மூட்டு வலிகளை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!!

ஏற்காடு, கொல்லிமலை, சிறுமலை பகுதிகளில் விளையும் ஒரு வகை தாவரத்தின் வேர்ப்பகுதி முடவாட்டுக்கால் என அழைக்கப்படுகிறது.

ஆட்டின் கால் போன்று ரோமங்களால் சூழப்பட்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது. அப்பகுதி மக்களுக்கு உடல் வலிகளை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.

குறிப்பாக முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாக உள்ளது.

எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் நன்கு உதவும்.

ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு. மேலும் பால்வினை நோய்களை சீர்செய்யும்.

உடல் வலி, வீக்கத்தை கரைக்கும். இருமல், மைக்ரான் தலைவலி, வயிற்றுப்புண், உடல் காயங்களை குணப்படுத்தும்.

இந்த கிழங்கின் மேல் தோலை சீவி விட்டு மை போல் அரைந்து, சீரகம், மிளகு, கிராம்பு, மஞ்சள், பட்டை, தக்காளி போன்றவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து அருந்தலாம்.