மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு திராட்சை விதை!
கருப்பு திராட்சை என்றவுடன், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, புளிப்பு
சுவை தான். திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ
குணங்கள் நிறைந்துள்ளன.
கருப்பு திராட்சை விதையில், புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.
ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது. சிறுநீரக செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்கிறது.
மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது.
பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும், புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது, நல்ல பலனை தரும்.
உடல் வளர்ச்சியில் குறைபாடு, உடல் பலகீனம், தோல் வியாதி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளோர், திராட்சை விதை தொடர்ந்து சாப்பிட்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
மூல நோயால் ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.