குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் மில்க் பால்ஸ் ரெசிபி...!

'ஸ்வீட் மில்க் பால்ஸ்' ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு பவுலில் 100 கிராம் சோளமாவு, 30 கிராம் சர்க்கரை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பிறகு அதனுடன் 200 மி.லி பாலை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் மாவு கரைசலை சேர்த்து மிதமான சூட்டில் கெட்டி பதம் வரும் வரை கிளற வேண்டும்.

இறுதியாக 20 கிராம் உப்பில்லாத வெண்ணெயை சேர்த்து இறுகும் வரை கிளற வேண்டும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, மிதமான சூட்டில் சிறிய உருண்டை உருட்டி அதன் மீது கோகோ பவுடரை தூவி பரிமாறினால் ஸ்வீட் மில்க் பால்ஸ் தயார்.