பார்வையை பாதுகாக்கும் பிஸ்தா! ஆய்வில் தகவல்!!
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டப்ட்ஸ் பல்கலை தன் புதிய ஆய்வில், பிஸ்தாவை உண்பது கண் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று கண்டறிந்துள்ளது.
பாலில் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை நாம் கலந்து குடிப்போம். பிஸ்தாவில் சுவையூட்டப்பட்ட ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. அருமையான சுவையுடன், ஆரோக்கியம் தரும் சத்துகளையும் கொண்டிருக்கிறது.
பிஸ்தாக்களில் லுடீன் (Lutein), ஜீயாக்சாண்டின் (Zeaxanthin) ஆகிய நுண்சத்துகள் உள்ளன. ஆனால், முட்டையில் லுடீன் மட்டுமே உள்ளது. ஆகவே முட்டையை விட பிஸ்தா நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பிஸ்தாவில் மோனோ, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவையும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை தான்.
கண் பார்வை குறைபாடு உடைய முதியவர்களுக்கு இது பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
தொடர்ந்து 12 வாரங்கள், 57 கிராம் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் விழித்திரை ஆரோக்கியம் மேம்படுதுவது ஆய்வுப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
பிஸ்தாவில் உள்ள வேறு சில சத்துகள் மூளைக்கு நன்மை தருகின்றன. நினைவாற்றல் தொடர்பான நோய்களுக்கு இது தீர்வாகிறது எனவும் ஆய்வு கூறுகிறது.