ஆரோக்கியம் நிறைந்த பூண்டு மிட்டாய்!

ஒரு பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் மற்றும் ¼ டீஸ்பூன் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் இதில் 1 கப் உரித்த பூண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.

பிறகு இதை வடிகட்டி குளிர்ந்த தண்ணீரில் போட்டெடுக்கவும். பூண்டுகளை வெளியே எடுத்து சுத்தமான துணியில் ஈரமில்லாமல் உலர வைக்கவும்.

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் ½ கப் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் பிரவுன் நிறமாக வரும் வரை கை விடாமல் கிளறவும்.

பிறகு அதில் உலர வைத்த பூண்டுகளை சேர்த்து அவற்றின் மேல் சர்க்கரை கலவை நன்றாகப் படியுமாறு கிளறவும்.

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். ஆறிய பின்னர் ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி சாப்பிடலாம்.