ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் சாலட்
தேவையானப் பொருட்கள்: பீர்க்கங்காய் பிஞ்சு - 1, பச்சை வேர்க்கடலை - 50 கிராம், எலுமிச்சை - 1,
சின்ன
வெங்காயம் - 10, தக்காளி - 1, தேங்காய் துருவல், சீரகப்பொடி,
மிளகுப்பொடி - சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு, தண்ணீர் -
தேவையான அளவு
பீர்க்கங்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி அதனுடன் கலக்கவும்.
இந்த கலவையில், தண்ணீரில் ஊற வைத்த வேர்க்கடலை, தேங்காய்
துருவல், சீரகப் பொடி, மிளகு பொடி, உப்பு, எலுமிச்சை சாறை நன்றாக
கலக்கவும்.
இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான பீர்க்கங்காய் பசுமை சாலட் ரெடி.