குடல் புற்றுநோயை தடுக்கும் சேப்பங்கிழங்கு இலை!
சேப்பங்கிழங்கு மற்றும் அதன் இலை அதிக பலன் தரக்கூடியவை. இந்த இலை பார்ப்பதற்கு இதய வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். சமைத்து சாப்பிட, ருசி அபாரமாக இருக்கும்.
இந்த இலையில், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும், குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், இந்த இலை துணை புரிகிறது.
வழக்கமாக கீரைகள் என்றாலே கண்களுக்கு வலிமை தரக்கூடியது. அதிலும், இந்த கிழங்கின் கீரை, கண் ஆரோக்கியத்தை காக்கிறது; கண் புரைகளை சரியாக்குகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளோர், இந்த இலையை உணவில் சேர்த்து கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
இந்த இலைகள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது. சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.
சேப்பங்கிழங்கு இலையின் சாறை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், அதிகரிப்பதையும் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், இந்த கீரையை தாராளமாக பயன்படுத்தலாம். இதை தவறாமல் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீர்ந்து குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.