காலை உணவுக்கேற்ற தக்காளி ஜூஸ்

வெயில் காலத்தில் நிறைய திரவ உணவு சாப்பிட்டால், உடலின் நீர்ச் சத்து குறையாமல் இருக்கும்.

அதற்காக தினமும் குடிக்கும் ஜூஸில், சர்க்கரை சேர்த்தால், அது எந்த சத்தும் இல்லாத வெறும் கலோரி. அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறும்.

சர்க்கரையே சேர்க்காத ஜூஸ் குடிப்பதே நல்லது. அதிலும், போதுமான ஊட்டச்சத்துக்கள் தரும் தக்காளி ஜூஸ் உட்கொள்ளலாம்.

காலையில் மூன்று அல்லது நான்கு தக்காளி மட்டும் சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

தக்காளியில், வைட்டமின் ஈ, சி மற்றும் ஏ, தையமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், ஆன்டி ஆக்சிடென்ட் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவும். இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும்.