நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம்?
நீண்ட நாட்களாக இரவில் தூங்காமல் வேலை செய்யும் போது மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு, உடல் பருமன், மன அழுத்தம் உட்பட பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் ஆரோக்கியமாகவும், ஆக்ட்டிவாகவும் இருக்கலாம்.
இரவு நேரத்தில் பணிபுரியும் போது நீண்ட நேரம் கண் விழித்திருக்க வேண்டியுள்ளதால், சிக்கன், டோஃபு, பருப்பு போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுக்கலாம்.
இவை, உடலுக்கு நிலையான எனர்ஜியை அளிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும்.
அவகேடோ, ப்ரோக்கோலி, பீன்ஸ், முழு தானியங்கள், கீரை, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் சாப்பிடலாம்.
இவை, குடல் இயக்கத்தை இயல்பாக்கி, மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக்கூடும். உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
டீ, காபியில் உள்ள காஃபைன் என்ற மூலக்கூறு தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல் உட்பட பல பிரச்னைகளுக்கு வழிவகுப்பதால் இவற்றை தவிர்க்க முயற்சிக்கலாம்.
தவிர்க்க முடியாத நிலையில் 1 அல்லது 2 கப் மட்டும் குடிக்கலாம். இதற்கு பதிலாக ப்ரூட் ஜூஸ்கள் அல்லது தண்ணீர் குடிக்கலாம். இவை உங்களை ஆரோக்கியமாக மட்டுமின்றி சுறுசுறுப்பாக வைக்கக்கூடும்.