ஹெத்தியான பேரீச்சம் பழ அல்வா

தேவையானப் பொருட்கள்: விதை நீக்கிய பேரீச்சம் பழம் - 300 கிராம், இஞ்சி - 100 கிராம், சர்க்கரை - 250 கிராம்.

முந்திரி - 50 கிராம், ஏலக்காய் - 5, நெய் - 50 கிராம், தண்ணீர் - தேவையானளவு.

இஞ்சியை தோல் நீக்கி சீவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைத்து சாறு எடுக்கவும்.

அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம் பழங்களை அரை மணி நேரம் ஊற விட்டு, மீண்டும் அந்த கலவையை, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து, கலவையில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

முக்கால் பதத்தில் இருக்கும் போது பொடித்த ஏலக்காய், முந்திரி, நெய் சேர்த்து கிளறவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்ததும், தட்டில் கொட்டி ஆறவிடவும்.

இப்போது, சுவையான, பேரீச்சம்பழ அல்வா ரெடி. அனைவரும் விரும்பி உண்பர்.