சம்மர் ஸ்பெஷல்...ஸ்டஃப்டு மேங்கோ குல்பி.

ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பால் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்ச்சி கொள்ளவும்.பால் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கைவிடாமல் கிளறிவும் .

பால் பாதி அளவு வற்றி வரும்போது 1/2 கப் மில்க் மெய்ட், 4டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.

1/4 கப் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறிய துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, சிறிது நேரம் கழித்து இறக்கவும். இந்த பாலை முற்றிலும் சூடு இல்லாமல் ஆற வைத்து கொள்ளவும்.

பிறகு, மாம்பழத்தின் மேல் காம்பு பகுதியை சிறிதளவு நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.இதன் நடுப்பகுதியை வெட்டி, விதையை நீக்கவும்.

இதேபோல் மற்ற 2 மாம்பழத்திலும் கொட்டையை நீக்கிய பின்னர், காம்பு பகுதியால் மூடி ப்ரீட்ஜரில் 15 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.

மாம்பழத்தை வெளியே எடுத்து நடுவில் உள்ள குழியில் தயார் செய்து ஆற வைத்த பாலை கலந்துவிட்டு ஊற்றி கொள்ளவும். பிறகு நீக்கிய காம்பு பகுதியால் மூடி கொள்ளவும்.

இதனை ப்ரீட்ஜரில் ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது 10-12 மணி நேரம் வரை வைத்து எடுத்து கொள்ளவும்.

12 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து பழத்தின் காம்பு பகுதியை கத்தியால் நறுக்கி எடுத்து விட்டு பழத்தை பீலர் வைத்து மேல் தோல் பகுதியை நீக்கி கொள்ளவும்.

பின்னர் கத்தி பயன்படுத்தி தேவையான வடிவத்தில் கட் செய்து சாப்பிடலாம்.