ஹெல்த்தியான கறிவேப்பிலை லட்டு ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: உலர்த்திய கறிவேப்பிலை - 2 கப், பொரிகடலை - 1 கப்.

பாதாம் பருப்பு - 15, பேரீச்சம்பழம் - 15, நாட்டு சர்க்கரை - 50 கிராம், ஏலக்காய், நெய் - தேவையான அளவு.

பொரிகடலை, பாதாம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையை நன்றாக வறுக்கவும்.

அத்துடன் விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும்.

இவை சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

பின், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து உருண்டைகளாக பிடித்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கறிவேப்பிலை லட்டு ரெடி.