புரதச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையின் ஆரோக்கிய நன்மைகளை அறிவோமா?

கலோரிகள் குறைவாக இருப்பதுடன், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது, பொட்டுக்கடலை. எனவே, வறுத்த பொட்டுக்கடலையை, பிரபலமான சிற்றுண்டி உணவாக வைத்துள்ளனர், வட மாநிலத்தவர்கள்.

ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள இவை, செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நீண்ட நேரம் உற்சாகமாக உணர வைக்கும்.

வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள மாங்கனீசு, போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள், இதய நோய் அபாயத்தை தடுக்கிறது.

உடலின் குளுக்கோஸ் ஏற்ற, இறக்கங்களை சரி செய்வதோடு, சர்க்கரை செயலிழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

எலும்புக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம் மற்றும் மூட்டு வலி ஏற்படுவதையும் தடுக்கிறது.

வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிட்டு வந்தால், இதிலுள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள், நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது.

இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுவதுடன், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கும்.