உடலை குளிர்விக்கும் தர்பூசணி, வெட்டிவேர் ஜூஸ்!
தேவையானவை: வெட்டிவேர் - 10 கிராம், துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி - நான்கு கப், புதினா இலை - 10
இஞ்சி - சிறு துண்டு, கறுப்பு உப்பு - ஒரு தேக்கரண்டி, தேன் அல்லது சர்க்கரை - அரை கப், மிளகுத் துாள் - அரை தேக்கரண்டி.
செய்முறை: வெட்டிவேரை நன்றாகக் கழுவி, இரண்டு டம்ளர் வெதுவெதுபான நீரில், எட்டு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டவும்.
தர்பூசணி துண்டுகளை இஞ்சியுடன் சேர்ந்து நைசாக அரைக்கவும்.
சர்க்கரையை, வெட்டிவேர் வடிகட்டிய நீரில் கரைத்து, லேசாக கொதிக்க விடவும். கறுப்பு உப்பு சேர்க்கவும்.
அதில், பழக்கலவையைக் கலந்து சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து எடுக்கவும்.
மேலாக, மிளகுத்துாள், புதினா இலைகளை துாவி, ஜில்லென்று பருகலாம். இதை குடிப்பதால் பித்தம் குறையும், உடலுக்கும் ஆரோக்கியம்.