மருத்துவ குணம் நிறைந்த இலுப்பை மரம்! பயன்கள் அறிவோமா!!

இலுப்பை மரத்தின் வேர், இலை, பூ, பட்டை, பழம், விதை என, அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

நோய் தீர்க்கும் குணம் இலுப்பை இலை பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும். இலுப்பை பூ, பாம்பு விஷம், வாதநோய் குணமடையவும் என கூறப்படுகிறது.

பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படவும் மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியதாக கூறப்படுகிறது.

இலுப்பை புண்ணாக்கு உடலை குளிர்ச்சியடைய செய்யவும், தலை வலியை நீக்கக் கூடியதாகவும் உள்ளது.

இலுப்பை பட்டை தோல் நோய் மற்றும் உடல் காயம், தீ காயம் போன்றவற்றை போக்கும் குணம் கொண்டுள்ளது.

இலுப்பை எண்ணெய் பூச்சிக்கடி, விரணம், கடும் இடுப்பு வலி போன்றவை நீங்கவும், குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவையை நீக்கக்கூடிய மருந்தாக உள்ளது