சுவைமிகு ரோஸ் ஸ்ரீகண்ட்! ஸ்ரீகண்ட் என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும்.

உடல் மெலிந்தவர்கள் எடையை அதிகரிக்க விரும்பினால்,சுவை மிகந்த ரோஸ் ஸ்ரீகண்டும் செய்து கொடுக்கலாம்.

இது தயிர், ரோஜா இதழ்கள், ரோஸ் சிரப் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

தயிர்.. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது.

முதலில் தயிரை வடிகட்ட, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து ஒரு பருத்தி துணியை அதில் விரித்து தயிரை கொட்டவும்.

அதை ஒரு மூட்டை போல் செய்து, பின் தயிரிலிருந்து தண்ணீரைப் முழுவதும் பிழிந்து எடுக்கவும். அதை எடுத்து பிரிட்ஜில் ஒரு இரவு வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த தயிர், ரோஸ் சிரப், தேன், ரோஜா இதழ்கள் ஆகியவற்றைச் சேர்த்து, க்ரீம் போல் வரும் வரை நன்றாக விஸ்க் செய்யவும்.

பரிமாறும் முன் அதில் சிறிது பாதாம், முந்திரி, பிஸ்தாவை பொடித்து மேலே தூவலாம். டேஸ்ட்டி ரோஸ் ஸ்ரீகண்ட் ரெடி.