நாவை அசர வைக்கும் அன்னாசிப்பழ பச்சடி.. செய்வது ரொம்ப ஈஸி…

அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்துடன், அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது.

இன்பும் புளிப்பு சுவையுடன் இருக்கும் அன்னாசிப்பழ பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.

இதெல்லாம் தேவை: அன்னாசிப் பழம் - 1 கப், தயிர் - 3/4 கப் பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 1/2 கப், வரமிளகாய் - 3, சீரகம் - 1 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு, கடுகு- 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, வெந்தயம் - 1/2 ஸ்பூன்

செய்முறை: அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் ப.மிளகாயை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு,வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு நறுக்கிய அன்னாசி பழம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

அதில் சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவலை மையாக அரைத்து சேர்க்கவும்.

கடைசியில் தயிர் சேர்த்து இறக்கி விட வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழ பச்சடி ரெடி...