மணக்கும் கொத்தமல்லியின் மகத்தான பயன்கள்...

கொத்தமல்லி கமகமக்கும் நறுமணத்தையும், உணவிற்கு தனித்தன்மையான சுவையையும் தருகிறது. கால்ஷியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம், பொட்டாஷியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

இது சருமத்தை குளிர்விக்க உதவும், மேலும் இவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது .

இதில் உள்ள வைட்டமின் கே, பற்கள் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்த கூடியது.

கோடை காலத்தில் கொத்தமல்லி இலை, கண்பார்வையை மேம்படுத்துகிறது. மேலும் கண் கோளாறுகளை தவிர்க்கிறது.

இப்பருவத்தில் அடிக்கடி உண்டால் செரிமான தன்மையை அதிகரிக்க உதவும். வயிறு உப்புசத்தை போக்கும்

கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.