தீபாவளி ஸ்பெஷல்... ஓமப் பொடி ரெசிபி இதோ !
தேவையானப் பொருட்கள்: கடலை மாவு - இரண்டு கப், அரிசி மாவு - ஒரு கப், ஓமம் - கால் கப், பெருங்காயத்துாள் - அரை தேக்கரண்டி, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப.
ஓமத்தை, 3௦ நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கரைசலாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்துாள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனுடன் வெண்ணெயும் அரைத்து வைத்திருக்கும் ஓம தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், முறுக்கு நாழியில் ஓமப்பொடி அச்சைப் போட்டு, பிழியவும்.
ஆறியவுடன் நொறுக்கி இப்போது ஓமப்பொடி ரெடி. காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதில், கருவேப்பிலை, நிலக்கடலை போன்ற தானியங்களை எண்ணெயில் பொரித்து சேர்க்க கூடுதல் சுவை அள்ளும்.