மக்காச்சோளத்தில் மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், பெருலிக் , அஸ்கார்பிக் மற்றும் போலிக் அமிலம்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் பலத்துக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் கைகொடுக்கிறது. 100 கிராம் சோளத்தில், 364 கலோரி இருக்கிறது.
இதை பச்சையாகவும், வேக வைத்தும் சாப்பிட, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது. இந்த நார்ச்சத்துக்கள், வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்கிறது. அத்துடன் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை காக்கிறது.
உடல் எடை குறைப்புக்கு பெரிதும் துணை புரிகிறது. இதை வெறுமனே வேக வைத்து சாப்பிட வேண்டும். வெண்ணெய், சீஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், பலன் கிடைக்காது.
மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் மக்காச்சோளத்துக்கு பெரும் பங்கு உள்ளது. அதேபோல, வயிறு புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி நிரம்பி இருக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க உதவுகிறது. எனவே, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மக்காச்சோளத்தை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.
மக்னீசியம், கால்சியம் நிறைந்துள்ள இந்த சோளம், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
சிறுநீரை அதிகமாக பெருக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு இருப்பதால், உடம்பிலுள்ள உப்பை கரைக்கும் தன்மையும் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு இல்லாதது.
நார்ச்சத்து அதிகம் உள்ள மக்காச்சோளத்தை சாப்பிட்டால், பசியை குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.
இதில், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்துக்கும் சீரான ரத்த ஓட்டம் செல்ல துாண்டுகிறது.