குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுக்கலாமா?

கழுதைப் பால் கொடுத்தால், குரல் வளம் நன்றாக இருக்கும், மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்களும் அண்டாது என, காலம் காலமாக பலரிடமும் நம்பிக்கை நிலவுகிறது.

கழுதைப் பாலை அப்படியே கொடுப்பதை மூட நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சூடு பண்ணாத எந்த பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப்பால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

கழுதைபால் கொடுப்பதால், நோய் கிருமிகள் குழந்தைகளை தாக்க வாய்ப்புண்டு.

மேலும் இது ஜீரணமாக நீண்ட நேரமாகும். இதன் மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொற்று நோய்கள், குழந்தைகளின் உடலில் உருவாகலாம்.

வாத நோய், கரப்பான், சிரங்கு, பித்தம் போக்கும் மருத்துவ குணம் உண்டு என்றாலும் அதை பச்சையாக கொடுப்பது சரியல்ல என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.