பலாப்பழ புட்டு... ஈஸியாக செய்யலாம்!
தேவையான பொருட்கள்: பலாப்பழம் விழுது - 1 கப், அரிசி மாவு - 1 கப், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 0.5 கப்
நெய், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
வெல்லத்தை, தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டி, பலாப்பழ விழுதை கலக்கவும்.
அரிசி மாவில் சுடான தண்ணீரை ஊற்றி, தேவையானளவு உப்பு சேர்த்து கிளறி, ஆவியில் வேக வைக்கவும்.
பின், நெய், பலாப்பழ கலவை, தேங்காய் துருவல், சுக்கு, ஏலக்காய் பொடி போட்டு நன்றாக கிளறவும்.
இப்போது, சுவையான பலாப்பழ புட்டு ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
அல்லது முன்னதாக, குழலில் புட்டு மாவு, தேங்காய் துருவல் ஆகியவற்றை அடுக்கடுக்காக சேர்த்தும் வேக வைத்து எடுக்கலாம்.
இதற்கு 1 டீஸ்பூன் தே.துருவல், 1 டீஸ்பூன் பலாப்பழ துண்டுகள், பின் 4 டீஸ்பூன் புட்டு மாவு, 1 டீஸ்பூன் தே.துருவல், 4 டீஸ்பூன் புட்டு மாவு,1 டீஸ்பூன் தே.துருவல் என அடுக்காக வைத்து வேக விடவும்.
தேங்காய் துருவலில் சுக்கு, ஏலக்காய் பொடி போன்றவற்றை முன்னதாகவே சேர்த்து விடவும்.