வாழைத்தண்டின் மகத்தான பயன்கள்...
வாழைத்தண்டு கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும், வைட்டமின் பி, சி ஆகிய சத்துகள் நிறைந்த ஒரு அற்புதமான உணவு.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சமைத்து உண்ண, சிறுநீர்
பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி
தணியும்.
வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர, தீப்புண் ஆறும். சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்.
கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி, பார்வையை தெளிவடையச் செய்யும். வாழத்தண்டு சாறு, நரம்பு மண்டலத்தை துாண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்
பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது.
வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணமாக்கும்.
தேள், பூரான் கடித்த இடத்தில், வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச, வலி குறையும்.