தயிரை பற்றிய சிறப்பு மருத்துவ நன்மைகள் அறிவோமா...
பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்கு தேவையான எண்ணெய் பசையைத் தந்து வயிற்றிலிலுள்ள வாயுவை கட்டுப்படுத்துகிறது.
வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது. புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைத் துாண்டும்.
பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்து விட்டால், ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல.
மேலும், நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி மற்றும் பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும்.
தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது.
பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரங்களில் பாலை தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது.
தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம். அந்த தண்ணீர் புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம்.
அந்தத் தண்ணீரை கால் கப் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற் சூடு மற்றும் களைப்பை சரி செய்ய உதவுகிறது.