எடை இழப்புக்கு உருளைக்கிழங்கு உதவுமா?
உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி, பி6, போலேட், நியாசின், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துகள் உள்ளன.
உருளைக்கிழங்கை வேகவைத்து அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள முழுமையான ஊட்டச்சத்துக்களை பெறுவதோடு எடையையும் குறைக்கலாம்.
100 கிராம் கேவைத்த உருளைக்கிழங்கில் வெறும் 100 கலோரி அளவு மட்டுமே இருக்கிறது.
உருளைக்கிழங்கின் தோலில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் அவை அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து பக்கோடா, போண்டா, பூரி மசால் என எண்ணெய் உடன் சமைத்தால் அதன் கலோரி அளவு பல மடங்கு உயர்ந்து விடும்.
தயிருடன் உருளைக் கிழங்கை சேர்த்து சாப்பிடுவது அவற்றிலுள்ள முழுமையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும்.
நீரிழிவு நோயாளிகள் மட்டும் உருளைக்கிழங்கை சாப்பிட விரும்பினால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம்.
மற்றப்படி டயட்டில் இருப்பவர்கள் தினமும் ஒரு உருளைக்கிழங்கை எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்து மசித்து சாப்பிட வேண்டும்.
ஆனால் கண்டிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரென்ச் பிரைஸ், ஆலு டிக்கி, ஸ்மைலி போன்றவற்றை சாப்பிடுவது கூடவே கூடாது.