குழந்தைகளை அசத்தும் ரவை அல்வா... ரெசிபி இதோ!
அல்வா என்றால் நாவில் எச்சில் ஊறும். ரவையிலும் கூட சூப்பர் சுவையான அல்வா செய்ய முடியும். அதை எப்படி செய்வது என பார்க்கலாமா?
முதலில் வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, ரவையை கருகாமல் வறுக்கவும்.
ரவை பொன்னிறமாக மாறி நறுமணம் வர துவங்கியதும், அதை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் நெய் ஊற்றவும். அதில் ஏலக்காய் துாள் போடவும்.
மீண்டும் அதில் ரவையை போட்டு நன்றாக கிளறவும். இரண்டு நிமிடங்களுக்கு பின், இரண்டு தம்ளர் நீரை சேர்க்கவும். மிதமான தீயில் வைப்பது அவசியம். கை விடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக துவங்கியதும், சர்க்கரை, சிட்டிகை உப்பு சேர்க்கவும். ரவை பொன்னிறமாக மாறி, நெய் தனியாக பிரிந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.
உலர்ந்த பழங்களை சிறிது நெய்யில் வறுத்து, அல்வாவில் துாவி ஒரு கிளறு கிளறினால், சூடான ரவை அல்வா ரெடி.
மாறுபட்ட சுவையுடன் இருக்கும். வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்தால், ரவை அல்வா செய்து கொடுத்து அசத்தலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.