ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய் தோசை

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி: 1 கப் சுரைக்காய்: 1, பச்சை மிளகாய்: 4, இஞ்சி: சிறிதளவு, பெ.வெங்காயம்: 1, கொத்தமல்லி இலை: சிறிதளவு, உப்பு: தேவையானளவு.

அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பின், ஊற வைத்த அரிசி, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

தேவையானளவு உப்பு, தண்ணீர், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்தால் சுரைக்காய் தோசை மாவு ரெடி.

மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அரைத்தவுடனேயே தோசையை வார்த்து சாப்பிடலாம்.

சுரைக்காயில் வைட்டமின் சி, பி, கே, ஏ, ஈ, இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது; அதேவேளையில் கொழுப்பு மற்றும் கலோரி குறைந்தளவில் உள்ளதால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது.

உடலிலுள்ள கெட்டக் கொழுப்பை கரைத்து எடையை சீராக வைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எனவே, பொறியல், கூட்டு, அவியல், ஜூஸ், தோசை மற்றும் அடை என பல வழிகளில் இதை சாப்பிட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடையையும் சீராக குறைக்கலாம்.