காபி, டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுபவரா நீங்க?

தினமும் காபி, டீ குடிப்பது பலருக்கும் பிடித்தமானது. குறிப்பாக, மாலை வேளைகளில் சூடான ஒரு கப் டீ, காபியுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது பலரின் வழக்கம்.

இது மகிழ்ச்சியை அளித்தாலும், ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கலாம்...

பிஸ்கட்டில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு செரிமான மண்டலத்தை பாதிக்கிறது. மலச்சிக்கல், இரைப்பை குடல் அழற்சி மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களை ஏற்படுத்துகிறது.

பிஸ்கட்களில் உள்ள BHA, BHT போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட தன்மைகள், உடலில் மரபணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

சர்க்கரை நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். பிஸ்கட்டை தொடர்ச்சியாக சாப்பிடும் போது, உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து பலவீனமாக்கிவிடும்.

ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களை பிஸ்கட்கள் உள்ளடக்கியுள்ளன.

எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மேலும், குழந்தைகள் பிஸ்கட்களை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் சரிவர சாப்பாடு சாப்பிட மாட்டர். எனவே, குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

எனவே, பிஸ்கட்களை அதிகளவில் சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே வறுத்த சுண்டல் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை பழக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.