கீரையில் உள்ள சத்துக்கள் சமைக்கும் போது குறைந்துவிடுமா? எப்படி பாதுகாக்கலாம்!

கீரை அனைவருக்கும் இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன.

கீரைகளை அதிக நேரம் சமைக்கும்போது அவற்றிலுள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சில அத்தியாவசிய சத்துகள் இழக்கப்படும். அதை சமைக்கும்போது எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என அறிந்துகொள்வோம்.

கீரையை ஆவியில் வேகவைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச் சத்துகளை ஓரளவு தக்கவைக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் கீரை வேக வெகு நேரம் ஆகாது. சுமார் 3 - 5 நிமிடங்களில் வெந்து மென்மையாகிவிடும்.

வேக வைக்க விருப்பமில்லாதவர்கள் சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் கீரைகளை வதக்கி எடுக்கலாம்.

கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது, பருப்பு நன்கு மசிந்து வெந்தவுடன் அதில் கீரையை போட்டு பச்சை வாசனை போனவுடன், தாளிக்கவும்.

கீரையை வேகவைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் பசுமை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் இறுதியில் போட்டு சிறிதளவே வதக்க வேண்டும். அவை பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.