இதயம் காக்கும் எண்ணெய்!
நல்லெண்ணையில் செசமோல் மற்றும் செசமின் உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
கடலை எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஈ இதயத்திற்கு நல்லது.
ஆலிவ் எண்ணெய் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்டகொழுப்பு அளவைக் குறைக்கிறது
கடுகு எண்ணெயில் ஏராளமான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அரிசித் தவிடு எண்ணெய் இதயத்திற்கு சிறந்த சமையல் எண்ணெய்களில் ஒன்று. சாலடுகள், குக்கீகள் மற்றும் கேக்குகள் தயாரிக்கும் போது இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
சூரியகாந்தி எண்ணெய் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.