தீபாவளி ஸ்பெஷல்: மகிழம் பூ முறுக்கு ரெசிபி!
தேவையானவை: பச்சரிசி மாவு - இரண்டு கப், பயத்தம் மாவு - அரை கப், பொடித்த சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
நெய் அல்லது வெண்ணெய் - இரண்டு மேஜைக் கரண்டி, தேங்காய்ப் பால் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் அரைத்து சலித்து அரை கப் அளவுக்கு மாவை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பயத்தம் மாவு, பொடித்த சர்க்கரை, உப்பு, நெய் அல்லது வெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணிலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
மாவை மகிழம்பூ அச்சில் சேர்த்து, வாழையிலையில் சிறு சிறு வட்டங்களாகப் பிழிந்து விடவும்.
அந்த முறுக்கை எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான மகிழம் பூ முறுக்கு ரெடி.