இன்று சர்வதேச காபி தினம் ! பிளாக் காபி நன்மைகள் அறிவோமா!!
பால் காபியை விட பிளாக் காபி பருகுவது நல்லது. காரணம் அதில் சர்க்கரை, கொழுப்பு, கலோரிகள் இல்லை. இதனால் காபியின் முழு நன்மைகளை பெறலாம்.
பிளாக் காபியில் ஆன்டிஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் , வைட்டமின் பி2, பி3,சோடியம் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.
பிளாக் காபி குடித்து வருவது நீரிழிவு அபாயத்தை எதிர்த்து போராட முடியும். குறிப்பாக ரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.
பிளாக் காபி நரம்புகளைத் தூண்டி ஆற்றலை அதிகரிக்கும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
இது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது மற்றும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது, பசியை அடக்குகிறது. எடை இழப்பிற்கும் உதவும்.
காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும்.
பிளாக் காபி பருகுவது அல்சைமர், பார்கின்சன் போன்ற சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கல்லீரல் புற்றுநோய், கொழுப்பு கல்லீரல் நோய், ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் அபாயத்தைக் குறைக்க கருப்பு காபி உதவும்.