குதிரைவாலி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள் பற்றி அறிவோமா …?
இந்தியாவை பூர்விகமாக கொண்ட குதிரைவாலி சிறுதானியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் என பல நன்னைகள் உள்ளன.
இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி அடங்கிய குதிரைவாலி அரிசியை அவசியம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் ஆரோக்கிய நலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
குதிரைவாலி அரிசியில் க்ளூட்டன் இல்லை. மேலும் குறைவான க்ளைசைமிக் இருப்பதால், சர்க்கரையை எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மேலும் குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
குறைவான கலோரிகளும் இருப்பதால், இதை சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கும். அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் ரத்த அழுத்த்த்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் தடுக்கும்.
குதிரைவாலி அரிசி சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. இது உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை கரைத்து சிறுநீரில் வெளியேற்றும்.