தேங்காய் பூவின் ஆரோக்கிய நன்மைகள் !
தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு சத்துகள் அதிகமுள்ளன. இதை உண்பதால் செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமுள்ளதால், முதுமை தோற்றத்தை தடுக்க உதவுகிறது. எனவே, வயது முதிர்வால் ஏற்படும் தோல் சுருக்கம் போன்ற பிரச்னைளை தவிர்க்கலாம்.
இதிலுள்ள சத்துக்கள், தைராய்டு சுரப்பை குணப்படுத்தும் என்பதால், தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் கிடைக்கிறது.
தேங்காய் பூவில், கலோரி குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னைகளுக்குக்கும் தீர்வாக உள்ளது.
இதயக் குழாய்களில் படியும் கொழுப்பை நீக்கும். உடலில் நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
இன்சுலின் சுரப்பை துாண்டி, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.