சிங்கப்பூரில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் மீ கோரேங் : ஈசியா செய்யலாம்..!
சிங்கப்பூர் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் உணவான 'மீ கோரேங் பெடாஸ்' ரெசிபியை வீட்டிலேயே எளிமையாக செய்வது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் தேவை : வெங்காயம் - 2 (நறுக்கியது) சிக்கன் - 500கி, மிளகாய் பேஸ்ட் - 2 கப், முட்டை - 4, மீ குனிங்(எக் நூடுல்ஸ்) - 1கிலோ, பொரித்த டோஃபு - 1 கப் , கடுகு இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதனுடன் சிக்கனை சேர்த்து வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன், மிளகாய் பேஸ்ட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடணும்.
தண்ணீர் அனைத்தும் வற்றி, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும். அடுத்து சிக்கன் மசாலாவை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு, முட்டை உடைத்து பொரித்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு மீ குனிங்(எக் நூடுல்ஸ்) மற்றும் பொரித்த டோஃபு, சிறிதளவு கடுகு இலை மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு கரண்டிகளை கொண்டு நன்றாக கிளற வேண்டும்.
மசாலா அனைத்தும் ஒன்றான பிறகு, சிறிதளவு உப்பை சேர்த்து கிளற வேண்டும். பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு இறக்கி பரிமாறினால் சுவையான மீ கோரேங் தயார்.