பால் ஆவியில் வேக வைத்த நிலப்பனங்கிழங்கு...பயன்கள் அறிவோமா...

நிலப்பனங்கிழங்கு (Curculigo orchioides) என்பது ஒரு மூலிகைக் கிழங்கு ஆகும். இவை உடலுக்கு வலிமையையும், புத்துணர்வையும் அளிக்கிறது.

சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை கிழங்கின் மேல் தோலை நீக்கி, பசும்பாலின் ஆவியில் வேக வைத்து, உலர்த்தி பொடியாக்கி, சூரணமாக பயன்படுத்துவர்.

இச்சூரணத்தை அரை தேக்கரண்டி அளவு எடுத்து, பசும்பாலுடன் கலந்து, தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும்.

இதனால், உடல் பலம் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று சித்த நுால்கள் மட்டுமல்ல; ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.

நிலப்பனங்கிழங்கு வெண்படை, கரும்புள்ளி போன்ற தோல் பிரச்னைகளை போக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியை போக்கி, உடலை வலுவாக்க உதவும். மேலும் காசநோய் போன்ற நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது

சிலருக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் வரலாம் என்பதால் இதை பயன்படுத்துவதற்கு முன் சித்த மருத்துவரை அணுகுவது நல்லது.