டேஸ்டியான மட்டன் கட்லெட்... ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் !
முதலில் 1/4 கிலோ மட்டனை நன்கு சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 1/2 உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் காய்ந்தவுடன் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது பெருஞ்சீரகம் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பமிளகாய் தலா 1, கறிவேப்பிலை, 1/2 டே.ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் அரைத்த மட்டனைச் சேர்த்துக் கட்டிகள் இன்றி நன்கு கிளறி சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும். மட்டன் பழுப்பு நிறமாக மாறும் வரை 10 நிமிடங்களுக்கு மூடி போடவும்.
பின்பு சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
தொடர்ந்து, சிறிதளவு பச்சை பட்டாணி, கெட்ச்அப் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலக்கவும். நான்கு நிமிடங்கள் கழித்து ஒரு பவுலில் மாற்றி ஆற விடவும்.
மட்டன் கலவையில் சிறிது பிரட்தூள் சேர்த்து கலந்து கெட்டியாக மாற்றிக்கொள்ளவும். பின் சிறிய உருண்டையாக உருட்டி அவற்றை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ வடிவமைக்கலாம்.
ஒரு முட்டையை அடித்து தனியாக வைக்கவும். அகலமான தட்டில் பிரட்தூள்களை பரப்பி வைக்கவும். பின், கட்லெட்டை முட்டையில் நனைத்து, பிரட்தூள்களில் பிரட்டி எடுத்து உலர விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் குறைவான தணலில் அடுப்பை வைத்தவாறு கட்லெட்டுகளை கவனமாக போட்டு பொன்னிறமானவுடன் எடுத்தால் சுவையான மட்டன் கட்லெட் ரெடி.