தூதுவளை கறிவேப்பிலை துவையல் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: துாதுவளை - 1 கப், துருவிய தேங்காய் - 0.5 கப், சின்ன வெங்காயம் - 15, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்.
கறிவேப்பிலை - 0.25 கப், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு - தேவையான அளவு, உப்பு, புளி, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், துண்டாக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கவும்.
பின் துாதுவளை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை ஆறிய பின் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான துாதுவளை கறிவேப்பிலை துவையல் ரெடி.
சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலை விரட்டி ஆரோக்கியம் தரும்.