ராகி இனிப்பு பணியாரம் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: ராகி அல்லது கேழ்வரகு மாவு - 1 கப், அரிசி மாவு - 0.25 கப், வெல்லம் - 1 கப்.

தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய் துாள், நெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், அரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின், துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

இந்தக் கலவையில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.

சிறிதளவு உப்பு, ஏலக்காய் துாள், நறுக்கிய முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி, 10 நிமிடங்கள் ஊற விடவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் தடவி, குழிகளின் முக்கால் பாகம் மாவை நிரப்பவும்.

ஒரு நிமிடம் கழித்து, பணியாரத்தைத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும், எடுத்து விடவும்.

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி பணியாரம் ரெடி.