சாத்துக்குடியில் நிறைந்துள்ள அற்புத சத்துகளை அறிவோமா…
சாத்துக்குடியில், வைட்டமின், 'சி' நிறைவாக உள்ளதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும்.
சாத்துக்குடியில் உள்ள, 'லெமனாய்டஸ்' என்ற வேதிப்பொருள், பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் நம் உடலை காப்பாற்றுகிறது.
வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் எடை நிச்சயமாக குறைந்து விடும்.
கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சாத்துக்குடி சிறந்தது.
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும், சாத்துக்குடிக்கு உண்டு. ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சாத்துக்குடியில் உள்ள, வைட்டமின், 'சி' சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, நம் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது.
சிறுநீரக பாதிப்பு உள்ளோர், சாத்துக்குடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.