வெயிலுக்கு இதமாக.. ஹெல்த்தியான வெள்ளரி ஜூஸ் !

1/2 டீஸ்பூன் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

தலா ஒரு வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு மிக்சி ஜார் அல்லது பிளென்டரில் நறுக்கிய வெள்ளரிக்காய், ஆப்பிள், இஞ்சி, ஒரு கைப்பிடி புதினா மற்றும் 1/2 எலுமிச்சை பழ சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்புடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன் தேவையான அளவு தேன் சேர்க்கவும். இனிப்புச் சுவையை விரும்பாவிட்டால் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்

பின், இதை வடிகட்டி, ஊற வைத்த சப்ஜா விதைகளையும் கலந்தால், இப்போது சுவையான, ஆரோக்கியமான வெள்ளரி ஜூஸ் ரெடி.

இதில், சில ஐஸ் துண்டுகளையும் சேர்த்து கூலாக குடிக்கலாம்.