தர்பூசணியை நம்பி சாப்பிடலாம் : உணவு பாதுகாப்பு துறை தகவல்
கலப்படமிக்க தர்பூசணிகள் சென்னையில் எங்கேயும் கண்டறியப்படவில்லை. தாராளமாக அவற்றை நம்பி வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
ரசாயனம் கலந்த, கலப்படமிக்க தர்பூசணி பழங்கள் கண்டறிவது மிகவும் சுலபம். இயற்கையாக தர்ப்பூசணிக்கென ஒரு கலர் இருக்கிறது.
இளம்சிவப்பை விட்டு, மிகவும் சிவந்த கலரில் தர்பூசணி இருந்தாலோ, சாப்பிடும் போது அதிக சர்க்கரை போல இனித்தாலோ, அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும்.
தர்பூசணியில் செயற்கை நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனத்தை தர்பூசணியில் ஏற்றினால் அது 24 மணி நேரத்தில் ஊசி செலுத்திய வழியாகவே வெளியேறிவிடும்.
மேலும் அந்த பழத்தை அறுத்து பார்த்தால் உள்ளே கன்னிப்போய் இருக்கும். அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
கோடைகாலங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை தர்பூசணியில் இருக்கும் லைக்கோபின் திரவம் சரி செய்வதுடன், 'ஹீட் ஸ்ட்ரோக்'கை தடுக்கிறது