கீடோ டயட்டால் இதய பாதிப்பு உண்டாகுமா?

மாவுச்சத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக புரதத்தையும் கொழுப்பையும் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் உணவு முறைக்குப் பெயர் தான் கீடோ டயட்.

இதன் முக்கிய நன்மை எடை இழப்பு ஆகும். கார்போஹைட்ரேட்டை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவு குறைகிறது. இது உடலில் கொழுப்பு சேர்வதையும் தவிர்க்கலாம்.

இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்ததாகும்.

அதேவேளையில், இந்த உணவு உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மையம் இந்த உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது என கண்டறிந்துள்ளது.

இந்த டயட் பல்வேறு நன்மைகளை அளித்தாலும், முன்னதாக டாக்டரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.