வளரும் குழந்தைகளுக்கு ஏன் பாசிப்பயறு உகந்தது?
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு அவசியமானது.
இதில் ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இது செரிமானத்தை எளிதாக்குகிறது.
இதிலுள்ள ஊட்டச்சத்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
பாசிப்பயறில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி பளபளப்பான பொலிவை தருகிறது.
இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துகள், வளரும் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
எனவே, குழந்தைகளுக்கும், வளரும் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.