கோடை வெயிலுக்கு குளிர்ச்சி, புத்துணர்வு தரும் கம்பங்கூழ்!
கம்பில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும்.
கம்புடன் அரிசி சேர்த்து, நன்கு குழையும்படி சோறாக்கி, மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்
கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்.
இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் துாண்டும். தாதுவை விருத்தி செய்யும். ரத்தத்தை சுத்தமாக்கும்.