குட்டீசுக்கு பிடிச்ச மொறு மொறு பிரைட் சிக்கன்... செய்யும் முறை செம ஈஸி!
கடைகளில் கிடைப்பது போல அதே சுவையுடனும் நல்ல தரத்துடன் வீட்டிலேயே கிரிஸ்பி பிரைட் சிக்கன் செய்ய முடியும்.
இதெல்லாம் தேவை : 250 கிராம் சிக்கன், 1 ½ கப் மைதா மாவு, 2 முட்டைகள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 'கருப்பு மிளகு, பூண்டு தூள், மற்றும் உப்பு தேவையான அளவு', பொறிக்க தேவையான எண்ணெய.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதா மாவு போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், பூண்டு தூள், கருப்பு மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.
கழுவி வைத்த சிக்கன் துண்டுகளை, அடித்து வைத்த முட்டையில் கலந்து மற்ற ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
பின் சிக்கன் துண்டுகளையும் தனித்தனியாக மைதா மாவு கலவையில் போட்டு, திட்டு திட்டாக தெரியும் வரை பிரட்டி எடுத்து அவற்றை எடுத்து வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் தயாராக வைத்திருந்த சிக்கன் துண்டுகளை முங்கும் அளவிற்கு மெதுவாக எண்ணெயில் போட வேண்டும்.
சிக்கனை எண்ணெயில் போட்ட பிறகு அதனை கிளற கூடாது. இல்லை என்றால் மாவு தனித்தனியாக வந்துவிடும். சில நிமிடங்கள் கழித்து நன்கு கோல்டன் பிரவுன் நிறத்தில் வந்த பிறகு வாணலியில் இருந்து எடுத்து விடலாம்.
அதிக எண்ணெயை போக்க சிக்கனை ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது நேரம் வைக்கலாம். மொறு மொறு பிரைட் சிக்கன் தயார்.