மழைக்காலத்தில் என்ன சாப்பிடலாம்... என்ன சாப்பிடக் கூடாது? அறிவோமா!!
மழைக்காலத்தில் சில உணவுகளை தவிர்ப்பதாலும், சில உணவு பொருட்களை சேர்ப்பதாலும், நோய்கள் வராமல் தடுக்கலாம்.
நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை, மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவின் போது, தூதுவளை ரசம் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடலாம்.
மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் சிறந்த சாய்ஸ். நிலவேம்பு பொடியுடன், தண்ணீரை சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
மழைக் காலத்தில் உணவில், இனிப்பு அதிகம் வேண்டாம். பால், பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அதிகம் சாப்பிடக் கூடாது.
இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது நல்லது. மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
நீர் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் தவிருங்கள்.
கண்டிப்பாக மழைக் காலத்தில், உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.