ரமலான் மாத ஸ்பெஷல் நோன்பு கஞ்சி ரெசிபி இதோ!!

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி அல்லது பச்சரிசி , மட்டன் கறி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், நல்லெண்ணெய, நெய், தேங்காய் பால்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 4, ஒரு பிரியாணி இலை,மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, உப்பு சுவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை : முதலில் 150 கிராம் சீரக சம்பா அரிசி, 25 கிராம் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

குக்கரில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், 2 ஸ்பூன் நெய் ஊற்றி சுடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.

அதில் கொஞ்சம் சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு இடித்து சேர்த்து, மேலும் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். பின் இரண்டு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேருங்கள்.

நன்கு வதங்கியதும் 3 பச்சை மிளகாய், ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து கை நிறைய கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கவும்.

100 கிராம் மட்டன் கொத்துக்கறியை அதில் சேர்த்து வேக விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதில் பாசிப்பருப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 வீசில் வைக்கலாம்.

நிறைவாக அனைத்தையும் மசித்து 50 மில்லி தேங்காய் பால் சேர்த்தால் ரமலான் நோன்பு கஞ்சி ரெடி.