நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்யும் லெட்யூஸ்!

நீர்ச்சத்து மற்றும் சத்து நிறைந்தது, லெட்யூஸ் . கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.

இதில், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

லெட்யூஸை வாங்கியவுடன், சமைத்து விடுவது நல்லது. வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும்.

மேலும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதல்ல. அவை அதிக அளவில் நீர்த்து போகும்.

லெட்யூஸ் உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடியது.

மேலும், இதை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

சாலட் செய்து உண்டால் செரிமான பிரச்னைகளை சரி செய்யும். இரவில் நல்ல துாக்கம் வரும்.